Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

சொந்த வீடு வாங்க விமல் நடத்தும் போராட்டம்தான் ‘மஞ்சள் குடை’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கணேஷ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் T.R.ரமேஷ், நாஹர் பிலிம்ஸ் ஜாகீர் உசேன் இருவரும் இணைந்து  தயாரித்துள்ள திரைப்படம் ‘மஞ்சள் குடை’.

இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக வால்டர்’ படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ரேணுகா ராதாரவி , Y.G. மகேந்திரன், விஜய் டிவி ராமர், மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரவீன் குமார், இசை –  ஹரி, வசனம் – கிஸ்ஸார், படத் தொகுப்பு – ராஜா முகமது, சண்டை பயிற்சி இயக்கம் –  ஹரி தினேஷ், கலை இயக்கம் – மாதவன், இணை இயக்கம் – மாரி செல்வம், பத்திரிகை தொடர்பு- மணவை புவன், தயாரிப்பு – T.R.ரமேஷ், ஜாகீர் உசேன், கதை, திரைக்கதை, இயக்கம் – சிவம் ராஜாமணி. (இவர் சிம்புதேவன்,  ஜெயம் ராஜா ஆகியோரிடம் உதவி இயக்குராக பணியாற்றியவர்)

படம் பற்றி இயக்குநர் சிவம் ராஜாமணி பேசும்போது, “ஃபேமிலி சென்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை இது. இன்றைய சூழலில் மிடில் கிளாஸ் மக்களின் பெரிய போராட்டமே வீட்டு வாடகைதான்.

அப்படி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நாயகன் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஒரு வீடு வாங்க நினைக்கிறார். அதற்கு எப்படி பணம் சேர்க்கிறார்கள். புது வீடு வாங்குவதற்கு அவர்கள் படும் போராட்டங்கள், இறுதியில் வீடு வாங்கினார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

இந்தப் படப்பிடிப்பு முழுவதையும் சென்னையில் லைவ் லொகேஷனில் மட்டுமே எடுத்திருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது…” என்றார் இயக்குநர் சிவம் ராஜாமணி.

- Advertisement -

Read more

Local News