Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

மாமன்னன் : மாரிசெல்வராஜ் வெளியிட்ட போட்டோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’.   ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.   ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 1ஆம் தேதி வெளியானது. மேலும் ஜூன் மாதம் படம் வெளியாகும் என அதில் படக்குழு தெரிவித்தது.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான், யுகபாரதி உள்ளிட்டோர் இருக்கின்றனர். அந்த பதிவில், “இசைப்புயலுடன் பிரவேசித்த வைகைபுயல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்க்கையில் படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கியுள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது. இப்படத்தில் வடிவேலு நெகட்டிவ்   கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News