Thursday, April 11, 2024

‘மாமனிதன்’ – பூடான் சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகள் பெற்றது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவானது, ‘மாமனிதன்’ திரைப்படம்.

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தார்.

இனம், மதம், மொழி கடந்த மனித நேயத்தை வெளிப்படுத்திய இப்படம், மக்களின் பேராதரவைப் பெற்றது.  திரையுலக பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்தப் படத்தைப் பாராட்டினார்கள்.

இந்நிலையில், பூட்டான் நாட்டில் நடைபெறும் புகழ் பெற்ற (Druk international film festival) டுருக் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த மாமனிதன்’ திரைப்படம்,  சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த குடும்ப திரைப்படம், சிறந்த இயக்குர், சிறந்த நடிகர் ஆகிய நான்கு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News