Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

மலையாள வில்லன் நடிகர் ரிஸ்பாவா திடீர் மரணம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத் திரையுலகத்தின் பிரபலமான வில்லன் நடிகரான ரிஸ்பாவா இன்று உடல் நலக் குறைவால் கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 55.

சிறிது காலமாக உடல் நலமில்லாமல் இருந்த அவர் கிட்னி பெயிலிரானதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் காலமானார்.

ரிஸ்பாவா 1990-ம் ஆண்டு வெளியான ‘ஹரிஹர் நகர்’ என்ற படத்தில் ‘ஜான் ஹோனாய்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துதான் மிகவும் பிரபலமானார்.

இதுவரையிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களிலும், சீரியல்களிலும் ரிஸ்பாவா நடித்துள்ளார். திரைப்படங்களில் பெரும்பாலும் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தாலும், குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.

‘அனியன் பாவா சேட்டன் பாவா’ படத்தின் வில்லன் ப்ளஸ் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். ‘சம்பக்குளம் தச்சன்’, ‘உப்புக்கண்டம் பிரதர்ஸ்’, ‘கபூலிவாலா’ ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் பெயர் வாங்கியிருந்தார் ரிஸ்பாவா. சமீபத்தில் ‘புரொபஸர் தினகன்’, ‘மகாவீரா’, ‘ஒன்’ ஆகிய படங்களில்கூட நடித்திருந்தார்.

ரிஸ்பாவா மரணத்திற்கு மலையாளத் திரையுலகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பலரும் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News