சமீப காலமாகவே தமிழ் திரையுலகை போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்கள் பல வருடங்களுக்கு முன்பு நடித்து ஹிட்டான படங்கள் அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான எமதொங்கா திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதேபோல மகேஷ்பாபு நடிப்பில் கடந்த 2010ல் வெளியான கலீஜா திரைப்படம் நேற்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப்படத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்திருந்தார்.
