தமிழ்த் திரையுலகத்தில் இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மானில் யார் சிறந்தவர் என்ற பட்டிமன்றம் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் இருக்கக் கூடியதுதான்.
ரஹ்மான் ஆஸ்கர் விருதினை வென்றுவிட்டதால் அவரது ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகிறார்கள். என்னதான் ஆஸ்கர் விருதினை ரஹ்மான் வாங்கினாலும் தற்போது உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் அனைவரும் காலையில் இருந்து இரவுவரையிலும் இளையராஜாவைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரஹ்மானின் பாடல்களும், இசையும் இப்போது அவுட் ஆஃப் பேஷனாகிவிட்டது என்று ரஹ்மான் ரசிகர்களிடம் சண்டையிடுகிறார்கள் இளையராஜாவின் ரசிகர்கள்.
இப்போது இவர்களின் பாராட்டுரைக்கு உரம் போடுவதுபோல ஒரு சம்பவம் நடத்திருந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தை செய்திருப்பது உலகளாவிய திரைப்படம் சம்பந்தமான இணையத்தளமான The Taste Of Cinema.
சமீபத்தில் தனது வெப்சைட் மூலமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலமாக உலகின் தலை சிறந்த 25 திரைப்பட இசையமைப்பாளர்களை அந்த இணையத்தளம் பட்டியலிட்டிருக்கிறது.
இந்தப் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்திருக்கிறார் ‘இசைஞானி’ இளையராஜா. ரஹ்மான் இந்த லிஸ்ட்டில் இல்லவே இல்லை என்பதுதான் ‘இசைஞானி’யின் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. அதேசமயம் இந்த இணையத்தளம் அவ்வளவு முக்கியமானதில்லை என்று ரஹ்மானின் ரசிகர்கள் சொல்லி புறந்தள்ளுகிறார்கள்.
முதல் 25 இடங்களைப் பிடித்திருக்கும் உலகளாவிய சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களின் லிஸ்ட் இதுதான் :
1. Ennio Morricone ITALY
2. Max Steiner USA
3. John Williams USA
4. Bernard Herrmann USA
5. Nino Rota ITALY
6. Tōru Takemitsu JAPAN
7. Michel Legrand FRANCE
8. Alan Menken USA
9. Ilayaraja INDIA
10. Jerry Goldsmith USA
11. Maurice Jarre FRANCE
12. John Barry USA
13. Hans Zimmer GERMANY
14. Joe Hisaishi JAPAN
15. James Horner USA
16. Georges Delerue USA
17. Dimitri Tiomkin UK
18. Elmer Bernstein USA
19. Howard Shore CANADA
20. Thomas Newman USA
21. Danny Elfman USA
22. Philip Glass USA
23. James Newton-Howard USA
24. Vangelis GREECE
25. Alan Silvestri USA
இசைஞானி இளையராஜா குறித்து அந்த இணையத்தளம் குறிப்பிடுகையில், “இளையராஜா இந்திய சினிமா துறையில் இருக்கும் இசை அமைப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிப் படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.
இந்தியாவிலேயே மிகச் சிறந்த இசையமைப்பாளராக இருந்து வரும் இளையராஜா இசைக் கருவிகளை வாசிப்பவர், இசைக் கோர்வைகளை உருவாக்குபவர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பன்மொழித் திறன் படைத்தவர்.
அவர் இதுவரையிலும் 950-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் 4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். அதோடு சிறப்பான பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார். இவருடைய பாடல் இசையும், பின்னணி இசையும் பல நூற்றுக்கணக்கான படங்களின் வெற்றிக்கு உதவியிருக்கின்றன..” என்று குறிப்பிட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானே இதை ஒத்துக் கொள்வார்.
அவரது ரசிகர்கள் மட்டும் ஏன் இப்படி அடம் பிடிக்கிறார்கள் என்று தெரியவில்லை..!