தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், நடிகர் சிம்புவின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் நாயகனான சிம்புவே அறிவித்திருக்கிறார்.
பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவுக்கும் மிக முக்கியமான நாள். அன்றைக்கு அவரது பிறந்த நாள் என்பதால் ‘மாநாடு’ படத்தின் டீஸர் வெளியாவதற்கு பொருத்தமான நாளாகத் தேர்வு செய்திருக்கிறார்கள் எனலாம்.

இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கை விடுத்திருக்கும் நடிகர் சிம்பு, “எனது பிறந்த நாளான வரும் பிப்ரவரி 3-ம் தேதியன்று தான் சென்னையில் உள்ள வீட்டில் இருக்கப் போவதில்லை. வெளியூர் செல்கிறேன். இதனால் ரசிகர்கள் அன்றைக்கு என் வீட்டுக்கு வர வேண்டாம். கூடிய சீக்கிரமே ரசிகர்களை நான் சந்திக்கிறேன்..” என்று அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.