Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘மாநாடு’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படம் தீபாவளி ரேஸில் இருந்து விலகிவிட்டது. தீபாவளியன்று ‘அண்ணாத்த’ மற்றும் ‘எனிமி’ ஆகிய படங்கள் வெளியாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மிக அதிகப் பொருட் செலவில் ‘மாநாடு’ படம் தயாரிக்கப்பட்டிருப்பதால் குறைந்தபட்சம் 500 தியேட்டர்களிலாவது படம் திரையிடப்பட்டால்தான் பெருமளவு போட்ட பணம் திரும்பக் கைக்கு வரும் என்ற சூழல் உள்ளது.

இதனால் தீபாவளி ரேஸில் இருந்து விலக ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முடிவெடுத்திருக்கிறார். இது தொடர்பாக சற்று முன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

திரையுலகத்தினருக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்…

நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் ‘மாநாடு’. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.

யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.

போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.

நமது ‘மாநாடு’ படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும். நட்டமடையக் கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும் அதன் வெற்றியும் பலியாக வேண்டும்??

ஆதலால், நமது ‘மாநாடு’ படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது. சற்று தள்ளி நவம்பர் 25-ம் தேதி படம் வெளியாகும்.

தீபாவளியன்று வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப் போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்…” என்று அந்த அறிக்கையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News