அமைச்சர் ஆகிவிட்டதால், இனி படம் தயாரிக்க – நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துவிட்டார் உதயநிதி. அவரது கடைசி படமான மாமன்னனனை, மாரி செல்வராஜ் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
ராசா கண்ணு மற்றும் ஜிகு ஜிகு ரயிலு ஆகிய இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு நாளை – ஜூன் 1-ம் தேதி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
உதயநிதி நடித்துள்ள கடைசி படம் என்பதால், இந்த விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என தகவல் பரவி உள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.