பிரபலமான தென்னிந்திய நடிகை த்ரிஷா தற்போது குட் பேட் அக்லி, தக்லைப், சூர்யா 45 மற்றும் ராம், விஸ்வாம்பரா போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அவர் தொடர்ச்சியாக ஆக்டிவாக இருக்கிறார். அவரை 70 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பட்டுப் புடவை அணிந்து, தலையில் மல்லிகைப்பூ சூடியிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் த்ரிஷா.
அந்த புகைப்படத்திற்கு மூன்று லட்சம் பேருக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். அதேபோல், “காதல் எப்போதுமே வெற்றி பெறும்” என்ற ஒரு பதிவையும் அவர் மேற்கொண்டுள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளை வழங்கி வருகிறார்கள்.