Friday, April 12, 2024

லிங்குசாமி இயக்கும் படம் ஜூலை 12-ல் துவங்குகிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொத்தினேனி மற்றும் தமிழின் முக்கிய இயக்குநரான லிங்குசாமி கூட்டணியில் புதிய படம் உருவாவது அனைவரும் அறிந்த செய்திதான்.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் துவங்கப்பட்ட இந்த திரைப்படத்தின், படப்பிடிப்பு பணிகள் இந்த மாதம் துவங்கவுள்ளது.

தயாரிப்பாளர் ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார்.

முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த RAPO19 படத்தில் ராம் பொதினேனி, கீர்த்தி ஷெட்டி இருவரும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

மலையாளத்தில் பெரு வெற்றி பெற்ற Drishyam மற்றும் Lucifer படங்களின் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் இந்த RAPO19 படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.  KGF படத்திற்கு ஆக்சன் காட்சிகளை வடிவமைத்த, சண்டை இயக்குநர்களான அன்புமணி, அறிவுமணி சுருக்கமாக அன்பறிவு எனப் பெயர் பெற்ற கூட்டணி இப்படத்திற்கு ஆக்சன் காட்சிகளை அமைக்கின்றனர்.

சமீபத்தில் பெரும் வெற்றி பெற்ற தெலுங்கு படமான Krack படத்தில் வசனத்தில் கலக்கிய Sai Madhav Burra இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். தமிழ் பதிப்பிற்கு எழுத்தாளர் பிருந்தா சாரதி வசனம் எழுதுகிறார். Jersey படத்திற்காக தெசிய விருதை வென்ற Naveen Nooli இப்படத்திற்கு படத் தொகுப்பு செய்கிறார். DY சத்யநாரயணா கலை இயக்கம் செய்கிறார். இந்திய அளவில் புகழ் பெற்ற மிகப் பெரும் தொழில் நுட்ப குழுவினர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

பன்மொழியில் உருவாகும் இப்படத்திற்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் படமாக்கப்படுகிறது.

நடிகர் ராம் வரும் ஜூலை 12-ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படவுள்ளது.

பெரும் இடைவேளைக்கு பிறகு ஆந்திராவில் துங்கவிருக்கும் இந்த முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் நடிகர் ராம்.

- Advertisement -

Read more

Local News