தேவர் மகன் – மாரி செல்வராஜ் சர்ச்சை இன்னும் தொடர்கிறது. இது குறித்து பத்திரிகையாளர் ராமு, யடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளதாவது:
இயக்குநர் மாரி செல்வராஜ், “கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் வடிவலு நடித்த இசக்கி கதாபாத்திரம் எனக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்தியது. சாதி ரீதியான ஒடுக்குமுறையை ஆதரித்த படமாக அது இருந்தது. அந்த இசக்கியைத்தான் மாமன்னன் படத்தில் கொண்டு வந்து இருக்கிறேன்” என தொடர்ந்து பேசி வந்தார்.
இதற்கு நெட்டிசன்கள் பலர், “அந்த படத்தில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கான பிரச்சினைதான் சொல்லப்பட்டது. தவிர வன்முறை வேண்டாம் என்பதையே படம் பறைசாற்றியது” என்றனர்.
ஆனால் மாரி செல்வராஜ் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் அவரது இயக்கத்தில் மாமன்னன் படம் வெளியானது. இதில் சாதி வெறியர் கதாபாத்திரத்தில் பகத்பாசில் நடித்து இருந்தார்.
இது குறித்து, “பகத்தின் கதாபாத்திரம் அதீதமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. இது சாதிபற்றுள்ளவர்களை தூண்டிவிடக்கூடும்” என்று பலரும் சமூகவலைதளத்தில் பதிவிட்டனர்.
அது தற்போது நடந்துவிட்டது.
பகத் நடித்த காட்சிகளை கட் செய்து ஜாதி பாடல்களை பின்னணியில் ஒலிக்கவிட்டு, சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆக, அன்று சொன்னது நடந்துவிட்டது. போகட்டும், இப்போதாவது, தேவர் மகன் படத்தில் திட்டமிட்டு காட்சி அமைக்கப்படவில்லை என்பதை மாரி செல்வராஜ் புரிந்துகொள்ளட்டும்” என தெரிவித்துள்ளார் பத்திரிகையாளர் ராமு.