பசங்க படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அவர், “சின்ன வயசில் இருந்தே சினிமா ஆசை உண்டு. சென்னையில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்க விரும்பினேன். அதற்கு டிகிரி படித்திருக்க வேண்டும் என்றார்கள். நானே ப்ளஸ் டூதான் படித்து இருந்தேன்.
பிறகு சேலத்தில் மெடிக்கல் ஷாப், தஞ்சையில் எலக்ட்ரிகல் கடைகளில் வேலை பார்த்தேன்.
பிறகு சென்னைக்கு வந்து சென்ட்ரல்ல இறங்கி செம மழை. எனக்கு எழுதிக்கொடுத்த நண்பனின் அட்ரஸ் போரூரில் இருந்தது. அந்த சீட்டு மழையில் பேரூர் என்று ஆகியிருந்தது. நம்பரும் கிடையாது.. காலை ஆறு மணிக்கு இறங்கியவன் இரவு ஒன்பது மணிவரை அலைந்து முகவரியை கண்டுபிடித்தேன்.
பிறகு விஜயகாந்த் ஆபீஸுக்கு சென்றேன். அங்கு வாட்ச் மேன், ஏவிஎம் போங்க என்றார். அங்க வாட்ச் மேனுக்கு ஆள் எடுத்தாங்க. அங்கு சேர்ந்தேன்.
அப்போதுதான் பாக்யராஜை சந்தித்து, அவரது பாக்யா அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக சேர்ந்தேன். அவரை இம்ப்ரஸ் செய்ய கவிதைகள் எழுதிக் கொடுப்பேன்.
இதை பார்த்த அவர், என்னை எடிட்டோரியலில் சேர்த்தார். ஆனால் அங்கு ஏற்கெனவே ஏழு பேர், உதவி இயக்குநர் கனவில் இருந்தார்கள்.
அவர்கள் என்னை எதிரியாக பார்த்தார்கள். அங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆகவே வெளியேறி வேறு இயக்குநரிடம் சேர முயற்சித்தேன்” என்று பசங்க பாண்டிராஜ் கூறியுள்ளார்.
அவரது முழுப்பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..