Wednesday, November 20, 2024

கமல் பட இயக்குநர் மறைவு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகருமான கே. விஸ்வநாத் உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை நள்ளிரவு மறைந்தார்.   அவருக்கு வயது 92.
வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நல பாதிப்பால் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

 இவர்  பத்மஸ்ரீ, தாதா சாஹப் பால்கே உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள கே. விஸ்வநாத், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகாரவும் நடித்தும் உள்ளார்.

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் பெடிபுல்லிபாரு என்ற ஊரில் 1930இல் பிறந்த இயக்குநர் கே. விஸ்வநாத், 1965ஆம் ஆண்டில் இயக்குநராக அறிமுகமானார். தெலுங்கு, இந்தி மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் கமல்ஹாசன் – அர்ஜுன் நடித்த குருதிப்புனல் படம் மூலம் நடிகராக தோன்றினார்.

இதன் பின்னர் அஜித்துடன் முகவரி, விஜய்யுடன் பகவதி, புதிய கீதை, தனுஷுடன் யாரடி நீ மோகினி, விக்ரமுடன் ராஜபாட்டை, ரஜினியுடன் லிங்கா போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக இவர் தமிழில் கமல், இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோருடன் இணைந்து உத்தமவில்லன் படத்தில் நடித்தார்.

கமலின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான படமான சலங்கை ஒலியை இயக்கியவர் இவர்தான்.

இயக்குநர் கே. விஸ்வநாத் மறைவுக்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News