ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘லத்தி’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.
இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இவர்களுடன் பிரபுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வசனம்: A.வினோத் குமார் / பொன்பார்த்திபன், சாம் C.S. இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – N.B.ஶ்ரீகாந்த், கலை இயக்கம் – எஸ்.கண்ணன்.
சமீபத்தில் வெளியான பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய A.வினோத் குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதையையும் எழுதியிருக்கிறார்.
இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகி முடிந்தது.
இதுவரையிலும் பெயர் வைக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று இந்தப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது. லத்தி என்று இந்தப் புதிய படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்தத் தலைப்பை முன்னிறுத்திய டைட்டில் போஸ்டரையும் தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் விஷால் இப்பொழுது, தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ‘எனிமி’ படத்தின் தமிழ்,தெலுங்கு மொழிகளுக்கான டப்பிங் பணிகளைச் செய்து வருகிறார்.
மற்றும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் இறுதி கட்ட வேலைகளும் நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து ‘லத்தி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும்.