Join our community of SUBSCRIBERS and be part of the conversation.

To subscribe, simply enter your email address on our website or click the subscribe button below. Don't worry, we respect your privacy and won't spam your inbox. Your information is safe with us.

News

Company:

Friday, March 14, 2025

Touring Talkies

போலீஸ் கான்ஸ்டபிள்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் விஷாலின் ‘லத்தி’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராணா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் படம் ‘லத்தி’.

ந்தப் படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் விஷால் நடிக்கிறார். மேலும் முதல் தடவையாக, கல்யாணம் ஆகி ஏழு வயது பையனுக்குத் தகப்பனா நடிக்கிறார். அவரது மனைவியாக சுனைனா நடிக்கிறார்.

மேலும் ராகவ், ரமணா, சன்னி, வினோத் சாகர், பிரபு, தலைவாசல்’ விஜய், முனீஸ்காந்த், ஏ.வெங்கடேஷ், மிஷா கோஷல், வினோதினி, மோகன்ராம் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Banner: RANA PRODUCTIONS, Produced By: Actor RAMANA – Actor NANDA, Director: A.VINOTH KUMAR, Music: YUVAN SHANKAR RAJA, DOP: BALASUBRAMANIEM, Additional DOP: BALAKRISHNA THOTA, Editor: N.B.SRIKANTH, Stunt: PETER HEIN, Art: S.KANNAN, Costume Designer: VASUKI  BHASKAR, VFX Head: HARIHARA SUDHAN, Sound Mixing: TAPAS NAYAK, Lyricist: KARTHIK NETHA, PRO: Johnson, Publicity Designer:JOSEPH JAXSON.

புதுமுக இயக்குநரான வினோத்குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த ‘லத்தி’ படம் பற்றி இயக்குநர் வினோத் குமார் பேசும்போது, “ரியாலிட்டி.. சர்ப்ரைஸ் நிறைந்த கான்ஸ்டபிள் வாழ்க்கைதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

நம் மாநில காவல் துறையில் 1,20,000 கான்ஸ்டபிள்ஸ் இருக்காங்க. ஆனால் அவர்களை நிர்வாகிக்கிற அதிகாரிகள் மிகவும் குறைவுதான். நடப்பு நிலைமையைச் சமாளிக்கிறது கான்ஸ்டபிள்ஸ் பொறுப்புதான். அவங்ககிட்டே இருக்கிற எளிமையான ஆயுதம் ‘லத்தி’தான். அதனோடு வால்யூ பத்தியும் படம் பேசும்…” என்றார்.

சென்னையில் ஆரம்பித்து, ஐதராபாத்தில் பரபரப்புடன் நடந்த படப்பிடிப்பை தொடர்ந்து சென்னையில் இப்போது இந்த லத்தி’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இதன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.

- Advertisement -

Read more

Local News

Hide WhatsApp Form
<p>How can I help you? :)</p>