இளையராஜா கிறிஸ்துவ மதத்தை இழிவு படுத்தும்படி பேசியதாக கூறி அவரை கடுமையாக விமர்சித்தார் ஜேம்ஸ் வசந்தன். இது சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஜேம்ஸ் வசந்தனுக்கு இளையராஜா மீது ஏன் இத்தனை கோபம் என்பது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.
அவர், “ 2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரம் படத்தில் ஜேம்ஸ் வசந்த் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. சொல்லப்போனால் இளையராஜா இசை அமைப்பது போலவே மனதை வருடும் பாடல்களாக இருந்ததால், இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாகவே மாறியது.
இந்நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஒரு காட்சியில் ‘சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும்’ என்ற இளையராஜாவின் பாடலை, அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பார். இதையடுத்து இளையராஜா, ‘என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி அந்த பாடலை பயன்படுத்தலாம்’ என வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டார்.
அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இப்போது இளையராஜாவை கடுமையாக ஏசுகிறார் ஜேம்ஸ்” என்று தெரிவித்து இருக்கிறார் அந்தணன்.