Saturday, September 21, 2024

‘ராட்சசன்’ வில்லன் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் ‘குற்றப் பின்னணி’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 6-வது படம் ‘குற்றப் பின்னணி’.

இந்தப் படத்தில் ‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கேரக்டராக மிரட்டிய சரவணன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சங்கர் செல்வராஜ், இசை – ஜித், பாடல்கள் – என்.பி.இஸ்மாயில், ஜாபர் சாதிக், படத் தொகுப்பு – நாகராஜ்.டி, சண்டைப் பயிற்சி இயக்கம் – ஆக்ஷன் நூர், பத்திரிகை தொடர்பு – வெங்கட், வசனம் – ரா.ராமமூர்த்தி, தயாரிப்பு – ஆயிஷா – அகமல், கதை திரைக்கதை இயக்கம் – என்.பி. இஸ்மாயில்.

‘வாங்க வாங்க’, ‘ஐ.ஆர்.8’ போன்ற படங்களை  இயக்கிய என்.பி. இஸ்மாயில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும் பார்த்தும் திகைக்கக் கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை களத்தில், பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே இந்த குற்றப் பின்னணி’ படம்.

பழனி, நாகர்கோவில், ஆலப்புழா போன்ற இடங்களில் மூன்று கட்ட படப்பிடிப்பாக 42 நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.

குற்றப் பின்னணிக்கு பின்னணி இசை பக்கபலமாக உள்ளது. படத்தில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

சென்னைக்கு அருகிலுள்ள செங்கல் சூளையில் பிரம்மாண்டமாக சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது.

இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார். படம் மிக விரைவில் வெளிவருகிறது.

- Advertisement -

Read more

Local News