Thursday, November 21, 2024

“கண்டிப்பாக ‘கோடியில் ஒருவன்’ 2-ம் பாகம் வரும்” – இயக்குநர் பேச்சு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் ஆண்டனி, ஆத்மிகா  நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து மக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் ‘கோடியில் ஒருவன்’ படக் குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.

இந்த விழாவில் இயக்குநர் ஆனந்தகிருஷ்ணன் பேசும்போது, “என் அம்மாவிடம் பத்திரிகையாளர்களை நம்பிதான் நான் படம் எடுக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். எனது கருத்துக்களை மக்களிடம் அவர்கள் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்று நம்பினேன். நான் நினைத்ததைவிட சிறப்பாகவே தற்போது நடந்திருக்கிறது.

நான் இயக்கிய முதல் படமான மெட்ரோ’ படத்திற்கு எனக்கு பல பாராட்டுகள் கிடைத்தன. ரசிகர்களுக்குப் பிடித்த கமர்சியல் படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது.

இந்தக் ‘கோடியில் ஒருவன்’ ஜெயிப்பான் என முதலில் நம்பியது விஜய் ஆண்டனி சார்தான். இந்தப் படத்திற்காக எனக்கு அதிக சப்போர்ட் அளித்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. விஜய் ஆண்டனிதான் உண்மையான ‘கோடியில் ஒருவன்’.

இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது என்று தயாரிப்பாளர் சொல்லும்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்டிப்பாக கோடியில் ஒருவன்-2’ படத்தை இயக்குவேன்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News