Friday, April 12, 2024

ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் ஹாரர் படம் ‘கிராண்மா’..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எத்தனையோ பேய்ப் படங்கள், திகில் படங்கள் தமிழில் வந்திருந்தாலும் அவற்றின் தரம் என்னவோ உள்ளூர் நிலையில்தான் இருக்கிறது. ஹாலிவுட்டுக்கும் நமக்கும் இந்த விஷயத்தில் தர வித்தியாசம் நெடுந்தொலைவு இருப்பதை நம்மால் உணர முடியும்.

இந்த நிலையில் தற்போது ‘கிராண்மா’ என்கிற பெயரில் ஒரு பேய்ப் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக தயாரிப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை  GMA பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள்  ஜெயராஜ்.ஆர்., விநாயகா சுனில் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமி ராஜ்  முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதை, திரைக்கதை – ஷிபின். ஒளிப்பதிவு – யஸ்வந்த் பாலாஜி.கே., படத் தொகுப்பு – அஸ்வந்த் ரவீந்திரன், இசை – சங்கர் ஷர்மா, ஒப்பனை – அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம், சண்டை இயக்கம் – முகேஷ் ராஜா, இயக்கம் – ஷிஜின்லால்  எஸ்.எஸ்.

படத்தின் கதையிலும், காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால், சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக் குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.  கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது. திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ‘கிராண்மா’  விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது.

- Advertisement -

Read more

Local News