சத்ய ஜோதி நிறுவனம் இதனை தயாரிப்பில், ஏ.ஆர்.கே.சரவணன் இயக்க, ஹிப்ஹாப் தமிழா, ஆதிரா ராஜ், வினய், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் படம் வீரன்.
இதன் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது:
“இந்த ‘வீரன்’ குடும்பங்களுக்கான படமாக இருக்கும். இதற்கு முன்பு என்னுடைய படங்கள் அப்படித்தான் என்றாலும், இதில் குழந்தைகளுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் ஒரு 90’ஸ் கிட் என்பதால் எனக்கு சக்திமான் மிகவும் பிடிக்கும். அதுபோல, ‘வீரன்’ ஒரு தமிழ் சூப்பர் ஹீரோவாக நீண்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கும். உடல் ரீதியாக மிகவும் சவாலாக இந்த படம் இருந்தது. இதற்கு முன்பு நான் இது போன்ற ஆக்ஷன் காட்சிகளை செய்ததில்லை. நான் இதுவரை நடித்த ஐந்து படங்களிலேயே இதுதான் பெரிய படம்” என்றார்.