சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர்கள் மிஷ்கின், ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது ஏ.எல். விஜய், “ஒரு குழந்தைக்கு மருந்து கொடுக்கிறோம் என்றால் அதில் சிறிது இனிப்பையும் சேர்ந்து கலந்து கொடுக்க வேண்டும். அப்படித்தான் கமர்சியல் படங்களைப் பார்க்க வேண்டும். தயாரிப்பாளர் போட்ட பணம் நமக்கு திரும்ப வர வேண்டும். ஆகவே மசாலா படங்கள் எடுப்பதில் தவறில்லை” என்றார்.
அப்போது குறுக்கிட்ட மிஷ்கின், “நாம் ரசிகர்களை குழந்தைகளாகவே வைத்திருக்கிறோம். அவர்களை முன்னோக்கி நகர விடுவதே இல்லை. அதுதான் கமர்சியல் என்ற பெயரில் வரும் மோசமான படங்களுக்கு வாய்ப்பாக ஆகிவிடுகிறது” என்று சாடினார்.