Friday, April 12, 2024

கல்யாண வீடியோவை 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்த கத்ரீனா கைப்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் தன்னுடைய திருமண வீடியோவை ஓடிடி தளத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் 2003-ம் ஆண்டு ‘பூம்’ என்ற ஹிந்தித் திரைப்படம் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். அதன் பிறகு பல்வேறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கும் பாலிவுட் நடிகரான விக்கி கவுசலுக்கும் இடையில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.

இவர்களின் திருமணம் கடந்த 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் உள்ள Six Senses என்ற கோட்டையில் நடைபெற்றது.

இந்தத் திருமணம் மிகப் பெரும் பொருட்செல்வில் அமைக்கப்பட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள், மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். 

மேலும், இவர்களின் திருமணத்தை பதிவு செய்து வெளியிட அமோஸான் ஓடிடி தளம் 100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இவர்களது திருமண நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காத்ரீனா கைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News