’டைகர் 3’யில் முதன் பெண் உளவாளியான, கத்ரீனா கைப் நடிக்கின்ற சோயா என்கிற கதாபாத்திரம் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவல் ஆணுக்கு சமமாக காட்டப்பட்டு வருகிறது.. சண்டை காட்சிகளில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்ப்பர்.
மேலும் இதுவரை வெள்ளித்திரையில் வேறெந்த பெண்ணும் செய்யாத அளவுக்கு ‘டைகர் 3’யில் இந்த மிகப்பெரிய ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு தயாராவதற்கு கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை கத்ரீனா கைப் பயிற்சியும் ஒத்திகையும் எடுத்துக்கொண்டு தயாராகியுள்ளார்.
இது பற்றி கத்ரீனா கூறும்போது, தன்னுடைய குடும்பத்தையோ அல்லது நாட்டையோ அல்லது மனித நேயத்தையோ காப்பாற்றவேண்டும் என்கிற நிலை வரும்போது ஒரு பெண்ணால் செய்ய முடியாதது என எதுவுமில்லை என்பதைத்தான் ‘டைகர் 3’ காட்டுகிறது என்றார்.
மேலும் அவர் உலகிலேயே மிகச்சிறந்த சண்டைப்பயிற்சி குழுவால் செயல்படுத்தப்பட்ட இந்த ஆக்சன் காட்சிகளை பெரிய திரையில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க இருப்பதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்கிறார்.
யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘ஓஜி’யான சூப்பர் ஏஜென்ட் டைகராக நடித்துள்ள சல்மான் கானுக்கு ஜோடியாக கத்ரீனா நடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.