Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

“போதையின் தலைநகர் காசி!”: பிரபல இயக்குநர் ராஜூ முருகன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

போதை ஒழிப்பை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டைஃபி) அமைப்பு, ‘போதையற்ற தமிழ்நாடு: ஒரு கோடி கையெழுத்து’ என்ற இயக்கத்தை முன்னெடுத்தது. இதன் நிறைவு விழா சென்னை லயோலா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், பிரபல இயக்குநர் ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜூ முருகன்,’’ போதை ஒழிக்கச் சட்டம் போட்டு தடுக்கும் கூட்டமும் , மற்றொரு புறம் திட்டம் போட்டு திருடும் கூட்டமும் இருக்கிறது. ஆனால், இங்கே சட்டம் போடும் கூட்டமும் திருடும் கூட்டமும் ஒன்றுதான்.

மது ஆலைகள் நடத்துபவர்கள் போதை மாஃபியாக்கள் பின்னால்  இருப்பவர்கள் எல்லாம் ஆட்சியாளர்கள்தான். போதையின் தலைநகராக காசிதான் இருக்கிறது…அது பிரதமருக்கு தெரியவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News