கவுண்டமணியுடன் செந்தில் மட்டுமல்ல ஒரு விரல் கிருஷ்ணா ராவ், குமரி முத்து என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இவர்கள் எல்லாம் சினிமாவை நம்பி மட்டுமே வாழ்க்கையை ஓட்டுபவர்கள். அன்றைக்கு ஷூட்டிங்கில் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே பணத்தோடு வீட்டுக்கு போவார்கள். இல்லையேல் வெறுங்கையோடுதான். சில சமயம் பல நாட்களுக்கு வேலை இருக்காது. எனவே, வறுமையில் வாடுவார்கள். விவேக் மற்றும் மயில்சாமி போன்ற நடிகர்கள் தன்னுடன் நடிக்கும் சக சின்ன நடிகர்களுக்கு பல வழிகளிலும் உதவுவார்கள்.
கவுண்டமணியும், வடிவேலும் யாரையும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் கருப்பு சுப்பையா. ஒரு நெல்லுக்கு ஒரு அரிசி எனில் ஒரு மூட்டைக்கு ஒரு மூட்டை அரசிதானே வர வேண்டும் என கவுண்டமனியை காண்டாக்கி காமெடி செய்தவர்.அதேபோல், ஈயம் பூசும் கவுண்டமணியின் ஆசையை தூண்டிவிட்டு ஒரு சின்ன பாத்திரத்தை கொடுத்து ஈயம் பூச சொல்லி ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.
இவரின் வாழ்க்கை பெரும் சோகத்தில் முடிந்திருக்கிறது. 300 பணம் தருகிறோம் என சொன்னதற்காக ஒரு காட்சியில் தங்கமூலம் பூசப்பட்டது போல் உடம்பெங்கும் பெயிண்ட் பூசி நடித்தார். அந்த பெயிண்ட் அவரின் ரத்தத்தில் கலந்து நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இந்த தகவலை நடிகர் மனோபாலா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.