Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

சூப்பர் ஸ்டார் வாய்ப்பை மிஸ் பண்ணிய கார்த்திக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நடிகரும், பத்திரிகையாளரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது திரை நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

அந்த வரிசையில் அவர் கூறிய சுவாரஸ்யமான சம்பவம்:

“பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அதனால்  அவர் அறிமுகப்படுத்திய நடிகர்களின் நடிப்பை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

மண்வாசனை படத்தின் கதை கிராமத்தை சுற்றி நடக்கும். ஆனால் அப்படத்தில் அறிமுகமான ரேவதி,கிராமத்தையே பார்த்திராதவர். ஆனால் ஒரு கிராமத்துப் பெண்ணாக.. த்துப்பேச்சி என்ற அந்த கதாபாத்திரத்தில் அப்படியே ஒன்றிப்போய் நடித்தார். இதற்கு அவரது  திறமை, கற்பனைத்தறன்தான் காரணம்.

அதே போல கடலோர கவிதை படத்தில் அறிமுகமான ரேகா, பல படங்களில் நடித்த அனுபவசாலி போல, சின்னச் சின்ன எக்ஸ்பிரன்ஸ்களையும் நுண்ணியமாக வெளிப்படுத்தினார்.

மறக்க முடியாத இன்னொரு நடிகை ராதா.  அலைகள் ஓய்வதில்லை படத்தில்தான் அவர் அறிமுமானார். படப்பிடிப்பில் ஒரு   டிராலி ஷாட்.  டிராலி  நிற்கும்போது ராதாவின் கண்களில் இருந்து கண்ணீர் வரணும். தேர்ந்த நடிகராக இருந்தாலும் சிரமமான காட்சி. கிளிசரின் போடாமலும் நடிக்க முடியாது.

ஆனாஸ் ராதா, கிளிசரின் போடாமலேயே சிறப்பாக நடித்தார். அசந்துபோய்விட்டேன்.

அதே படத்தில் அறிமுகமான  கார்த்திக்கும் சிறந்த நடிகர். அவர் அடைந்திருக்க வேண்டிய  உயரம் அதிகம். அதை அவர் மிஸ் பண்ணிட்டார்..

கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் சூப்பர் ஸ்டார் பட்டியலில் வந்திருக்க வேண்டியவர்” என்று தெரிவித்தார் சித்ரா லட்சுமணன்.

குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க…  டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..

 

 

- Advertisement -

Read more

Local News