வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விசயம் அல்ல. தான் இயக்கிய சின்ன ராஜா படத்தின் படப்பிடிப்பை மொரீசியஸ் நாட்டில் நடத்தினார். இத்தீவு நாடு, சென்னையில் இருந்து 4,468 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்த படப்பிடிப்பு அனுபவத்தை சித்ரா லட்சுமணன், டூரிங் டாக்கீஸ் யு டியுப் தளத்தில் பகிர்ந்துகொண்டார்.
“சின்ன ராஜா திரைப்படம் 1999ல் வெளியானது. எனது சகோதரர் சித்ரா ராமு தயாரித்தார். கார்த்திக், ரோஜா ஜோடியாக நடித்தனர்.
இங்கே படப்பிடிப்பு நடந்தால் லைட்மேன், உணவு பரிமாறுபவர் என நூறு பேருக்கு மேல் இருப்பார்கள். வெளிநாடு.. அதுவும் மிக தூரத்தில் உள்ள நாட்டில் படப்பிடிப்பு. ஆகவே மொத்தம் 20 பேர்தான் சென்றோம்.
அங்கு இரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகள் எடுத்தோம்.
ரோஜா நடிக்கும்போது, கார்த்திக்தான் ரிப்ளக்டர் பிடிப்பார். அவர் நடிக்கும்போது ரோஜா அந்த வேலையைச் செய்வார். சாப்பாடு பறிமாற தனியாக ஆட்கள் கிடையாது. பப்பே ஸ்டைலில் சாப்பாட்டை வைத்துவிடுவோம்.. அவரவர போட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள். அல்லது ஒருவருக்கு ஒருவர் பறிமாறுவார்கள்.
அந்த காலகட்டத்தில் கார்த்திக், ரோஜா இருவருமே பெரிய ஸ்டார்கள். ஆனாலும் மிக எளிமையாக முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மறக்க முடியாத அனுபவம் அது” என்றார் சித்ரா லட்சுமணன்.
இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்