Wednesday, April 10, 2024

‘ஜப்பான்’ பட டப்பிங் பணி:  கார்த்தி  வீடியோ வெளியீடு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்தியின் 25ஆவது படமாக உருவாகும் ‘ஜப்பான்’ படத்தை ராஜூமுருகன் இயக்குகிறார். இந்தப் படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

‌சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்த இதன் இறுதிக்கட்டப் படபிடிப்பு கடந்த ஜூன் 24-ம் தேதி முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங்கை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ‘ஜப்பான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

Read more

Local News