Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

உலக அரங்கில் வலம் வரும் தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் கலைப்புலி S.தாணுவின் தயாரிப்பில், நடிகர் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி திரையிடப்பட்டு மிகப் பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் படைத்தது.

அது மட்டுமில்லாமல் OTT தளமான AMAZON PRIME-ல் ‘கர்ணன்’ மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றது.

கடந்த சுதந்திர தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கர்ணன்’ திரைப்படம் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 9.4 TRP பெற்று ரசிகர்களை கவர்ந்தது சாதனை படைத்தது.

தற்போது அடுத்த பெருமையாக  ஜெர்மனியில் FRANKFURT நகரில் வருகிற அக்டோபர்  மாதம் 12,13,14 தேதிகளில் நடக்கவிருக்கும் NEW GENERATIONS INDEPENDENT INDIAN FILM FESTIVAL 2021-ல் கர்ணன்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது என்பது தமிழ் சினிமா ரசிகர்களை பெருமைப்பட வைத்திருக்கிறது.

- Advertisement -

Read more

Local News