Wednesday, April 10, 2024

கண்ணகி – விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, மயில்சாமி, வெற்றி, யஷ்வந்த் கிஷோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “கண்ணகி”.

ஷான் ரகுமான் இசையில்  ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தில் நான்கு நாயகிகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. கிராமத்தில் இருக்கும் அம்மு அபிராமி பல மாப்பிள்ளைகள் வந்து பார்த்தும் ஏதேதோ காரணத்திற்காக திருமணம் தொடர்ந்து தடை படுகிறது. அம்மு அபிராமியின் அம்மாவான  மெளனிகா, தந்தையான மயில்சாமி இருவரும் மகளின் வாழ்க்கை குறித்து கவலைப்படுகின்றனர்.

வித்யா பிரதீப்: விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார் வித்யா பிரதீப்பின் கணவர். வித்யா பிரதீப்பிற்கு ஆதரவாக வாதாடுகிறார் வெற்றி. விவாகரத்தை வேண்டா வெறுப்பாக திருமணபந்தத்திலிருந்து விடுகொடுக்கிறார். வித்யா பிரதீப்பிற்கும் வெற்றிக்கும் இடையே நட்பு ஏற்படுகிறது.

 

ஷாலின் சோயா: தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் ஷாலின். தண்ணி, தம்மு  என்று மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  அவரது நடவடிக்கையால் அலுவலகத்தில் அவரை தவறாக பார்க்கவும் பேசவும் படுகிறார். ஒருவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். சில நாட்கள் கழித்து அவர் ஷாலினிடம் திருமணம் செய்து கொள்ள ப்ரப்போஸ் செய்கிறார்.

கீர்த்தி பாண்டியன்:

யஷ்வந்த் கிஷோர் வீட்டில் இருக்கும் கீர்த்தி பாண்டியன் நான்கு மாத கர்பிணியாக இருக்கிறார். சிசுவை கலைக்க இருவரும் முயற்சி செய்கின்றனர். ஆனால், சிசு 4 மாதங்கள் ஆகிவிட்டதால் அதனை கலைக்க மருத்துவர்கள் மறுக்கின்றனர்.

இந்த நால்வரின் கதை தான் இந்த “கண்ணகி” படத்தின் கதை. இவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பது தான் மீதி கதை

 

நான்கு கதாபாத்திரங்களும் யதார்த்தமாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் யஷ்வந்த் கிஷோர். பல படங்களில் நடித்த அனுபவத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நாயகி அம்மு அபிராமி. தனது தந்தை இழப்பை தாங்க முடியாமல் அழும் காட்சியில் நம்மையும் அழ வைக்கும் அளவிற்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அம்மு அபிராமி.

வாழ்க்கை யாருக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வேண்டா வெறுப்பாக இருக்கும் நிலையில், ஒரு கை, துணையாக வரும்போது அதுவும் நம்மை விட்டுச் சென்றால்… அந்த மனநிலையை நன்றாகவே உணர்ந்து உள்வாங்கி நடித்திருக்கிறார் நாயகி வித்யா பிரதீப்.

ஒரு திமிரான, தெனவட்டான எவருக்கும் அடங்காத பெண்ணாக நடித்து கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார் ஷாலின்.

 

பல விதமான சோகங்களை மனதிற்குள் தாங்கிக் கொண்டும் 4 மாத சிசுவை வயிற்றில் ஏந்திக் கொண்டும் ஒரு இறுக்கமான மனநிலையில் நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன் சபாஷ் போடவைக்கிறார்.

 

ஷான் ரகுமானின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலன் சேர்க்கிறது. பாடல்கள் கதைக்கு  ஏற்றது போல் உள்ளது.

ராம்ஜியின் ஒளிப்பதிவு காட்சிகளை ஈர்க்கவைத்துள்ளது. இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகள் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர். எழுந்து நின்று கைதட்ட வைக்கிறது. வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கிறது.

கண்ணகிகொண்டாடப்பட வேண்டிய படம்.

- Advertisement -

Read more

Local News