தமிழ்த் திரையுலகில் கோலோச்சியவர், கவியரசு கண்ணதாசன். ஆனால் ஆரம்ப நாட்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சொந்த ஊரில் இருந்து திருச்சிக்கு பயணமான இவருக்கு அங்கே வரவேற்பு இல்லை. அதனால் அங்கிருந்து சென்னை செல்ல முடிவு செய்தார். ஆனால் ரயில் கட்டணத்துக்கு பணம் இல்லை. வெறும் 25 காசுதான் அவரிடம் இருந்தது. ஆகவே டிக்கெட் இல்லாமல் ரயில் பயணத்தை மேற்கொண்டார்.
பிராட்வேவில் செயல்பட்டு வந்த ஒரு பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருந்த ஆசிரியரிடம், தான் எழுதிய கதை ஒன்றை கொடுத்தார். அவரோ, கதையை திருப்பித் தந்துவிட்டார். ஆக, அங்கு வேலை இல்லை.
அந்த பத்திரிகை அலுவலகத்தில் இருந்த மெரினா பீச் சென்றார் கண்ணதாசன். . இரவு அங்கேயே படுத்து தூங்கினார்.
தன்னை எழுத்தாளனாக ஏற்க உலகம் தயாராக இல்லை என வருத்தப்பட்டார். சரி வேறு வேலை பார்ப்போம் என முடிவெடுத்தார்.
ஒரு ஓட்டலில் வேலை கேட்டார். பேச்சுவாக்கில் நாட்டுக்கோட்டை செட்டியார் இனத்தைச் சேர்ந்தவன் என இவர் சொன்னதும், அந்த ஓட்டல் முதலாளி, கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பிவிட்டார். அடுத்து சிகை அலங்கார கடை ஒன்றில் வேலை கேட்டார். அங்கும் வாய்ப்பில்லை. இப்படி பல வேலைகளுக்கு முயற்சி செய்து, கிடைக்காமல் பிறகுதான் திரைத்துறைக்கு வந்தார்.
அவரை எழுத்தாளராக இந்த உலகம் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் இவர்தான் பிற்காலத்தில் 5000க்கும் மேற்பட்ட நாவல்.. 4000க்கு மேற்பட்ட நாடகம், கட்டுரைகளை எழுதினார்.
வாழ்க்கை விசித்திரமானது.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..