Saturday, April 13, 2024

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் திரு.தீபக் அவர்களிடம் இருந்து இத்திரைப்படத்திற்கு தடையில்லா சான்று பெற்ற பின்புதான் இந்த ப் படம் உருவாகி வருகிறது. 

விப்ரி மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஷ்ணுவர்தன் இந்தூரியும், கர்மா மீடியா அண்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சைலீஸ் ஆர்.சிங்கும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். சசிகலா கதாபாத்திரத்தில் மதுபாலா நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், பூர்ணா, ஜிஸ்னு சென்குப்தா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

‘பாகுபலி’ எழுத்தாளர் திரு விஜயேந்திர பிரசாத் இந்த படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியிருக்கிறார்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஆண்டனி படத் தொகுப்பு செய்கிறார். ஏ.எல்.விஜய் படத்தினை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா போன்ற தோற்றத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

- Advertisement -

Read more

Local News