Friday, April 12, 2024

‘கமலி From நடுக்காவேரி’ – பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகிறது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அப்புண்டு ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘கமலி From நடுக்காவேரி’.

இந்தப் படத்தில் ‘கமலி’ என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். மேலும், புதுமுகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ்ரீனிவாசன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் – ராஜசேகர் துரைசாமி, இசை – தீனதயாளன், ஒளிப்பதிவு – ஜகதீசன் லோகயன், படத் தொகுப்பு – R.கோவிந்தராஜ், கலை இயக்கம் – தியாகராஜன், பாடல்கள் – யுகபாரதி, மதன் கார்க்கி, நடன இயக்கம் – பப்பி, சதீஷ் கிருஷ்ணன், மக்கள் தொடர்பு – ஜான்சன், நிர்வாக தயாரிப்பு – A.ஜெய் சம்பத், தயாரிப்பு அப்புண்டு ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்.

 ஒரு சராசரி பெண்ணின் கல்விக்கான பயணத்தையும், தன்னைத்தானே அறிந்து கொள்ளும் அவளது வாழ்வையும் அழகாக சொல்லியிருக்கும் படம்தான் இந்த “கமலி From நடுக்காவேரி”.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசும்போது, “இது எனது முதல் திரைப்படம். நான் வாழ்வில் சந்தித்த விசயங்களைத்தான் இதில் திரைக்கதையாக மாற்றினேன்.

ஒரு வகையில் நான்தான் அந்த கமலி. இப்படம் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வரும் பெண், சமூகத்தில் பெண்கள் மீது வைக்கபடும் வரம்புகளை தாண்டி, கல்வியை பெறுவதும், தன் முழு ஆற்றலை அறிந்து கொள்வதும்தான்  கதை.

கிராமத்தில் இருந்து வந்து IIT-க்குள் நுழையும் பெண், அவள் வழியில் சந்திக்கும் காதல், சுவராஸ்யங்கள், திருப்பங்கள், நிகழ்வுகள்… இப்படித்தான் இந்தப் படம் பயணிக்கும்.

இப்போதும் கிராமப் புறங்களில் பென்கள்  கல்வியில் அக்கறை காட்டுவதில்லை. பெண்கள் இன்னும் அடக்கி வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் முழுமையான ஆற்றல் அவர்களுக்கே தெரிவதில்லை. அதனை வெளிக்கொண்டு வரும் படைப்பாக இப்படம் இருக்கும்.

இது சீரியஸான கருத்து சொல்லும் படமாக இருக்காது. காதல், நகைச்சுவை அனைத்தும் கொண்ட மென்மையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும்.

இந்தக் கதைக்குப் பொருத்தமான நடிகையை தேடியபோது கயல் ஆனந்தி மிகச் சரியானவராக தோன்றினார். கயல் ஆனந்தியின் திறமை இதுவரை முழுமையாக வெளிவரவில்லை. அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டியவர். இப்படம் அவரை வேறு தளத்திற்கு எடுத்து செல்லும். கண்டிப்பாக, இப்படத்தில் அனைவரும் அவரின் நடிப்பை கண்டு பிரமிப்பார்கள்.

கோவை நக்கலைட்ஸ் சேனலின் மிகப் பெரிய ரசிகன் நான். முதலில் கதாநாயகனின் தோழி கதாபாத்திரத்திற்காக நடிகையை தேடியபோது, நக்கலைட்ஸில் உள்ள ஸ்ரீஜா நடிப்பு மிகவும் சரியாக இருக்கும் என தோன்றியது.  அதனால் ஸ்ரீஜாவை நேர்காணல் செய்தோம்,

அப்போது ஸ்ரீஜாவுடன் அவர்களின் நண்பர்கள் இருவர் வந்திருந்தனர். அவர்கள் நடிப்பும் எனக்கு பிடித்திருந்தது. அவர்களிடம் படத்தில் சின்ன கதாபாத்திரங்கள் உள்ளது, நடிக்க விருப்பம் உள்ளதா என கேட்டேன். அவர்களும்  ஒப்புக் கொண்டார்கள். சிறிய பாத்திரம் என்றாலும் மிகவும் சிறப்பாக அவர்களை பணியை செய்து கொடுத்தனர். நக்கலைட்ஸ் குழுவினர் அதி திறமைசாலிகள். அவர்கள் அனைவரும் இன்னும் நன்றாக வர வேண்டும்.

அனைவரும் ரசிக்கும்படியான படமாக இது இருக்கும் வரும் பிப்ரவரி 19-ம் தேதியன்று உலகம் முழுவதும் இத்திரைப்படம் மாஸ்டர் பீஸ் கம்பெனி மூலம் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News