Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

கமல்ஹாசனுக்கு காலில் மீண்டும் அறுவை சிகிச்சை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தனது காலில் ஏற்பட்டுள்ள வலிக்காக அறுவை சிகிச்சை செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியைத் துவக்கி அதன் வளர்ச்சிக்காகவும், வரப் போகும் சட்டமன்றத் தேர்தலுக்காகவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

வாரந்தோறும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரின் 4-வது பாகத்தையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் 4-பகுதி இன்றுடன் முடிவடைகிறது. அதோடு கமல்ஹாசன் மேற்கொண்ட முதற்கட்ட தேர்தல் பிரச்சார நிகழ்வு முந்தா நாளுடன் முடிவடைந்தது.

இதனால் தனது காலில் இன்னமும் இருக்கும் சின்ன பிரச்சினைக்காக மருத்துவமனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்யவிருப்பதாக நடிகர் கமல்ஹாசன் இன்றைக்கு அறிவித்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை காலத்தின்போது மக்களுடனும், தனது கட்சியின் தொண்டர்களுடனும் வீடியோ வழியாகத் தொடர்பு கொண்டு பேசப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சை முடிந்த வந்து பின்பு கமல்ஹாசன் தனது பட வேலைகளைத் துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News