பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை அடுத்து, மாமன்னன் என்ற படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் 29-ந் தேதி வெளியாக உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், “தேவர் மகன் படத்தில் வந்த இசக்கி என்ற கேரக்டர் தான் மாமன்னன். நான் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் இந்த 3 படங்கள் பண்ணுவதற்கு முன்பாகவும் ஒவ்வொரு முறையும் தேவர்மகன் படத்தை பார்த்துதான் திரைக்கதை அமைத்தேன்.
தேவர்மகன் படத்தில் பெரிய தேவர் சின்ன தேவர் என்ற கேரக்டருக்கு இடையில் எனது அப்பா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த மாமன்னன் படம் என்று கூறியிருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் சாதி வெறியை ஏற்படுத்திய படம் தான் தேவர்மகன் என்பது போல் மாரி செல்வராஜ் பேசியிருந்ததார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடல் வைத்து சாதி பெருமையை வளர்த்துவிட்டதால் இசக்கி போன்ற ஆட்கள் இன்னும் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இத்தனை நாள் கழித்து, மாரி செல்வராஜ் பேச்சு, கமலை அசிங்கப்படுத்திவிட்டதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
அவர்கள், “தேவர் மகன் படம் மட்டுமே சாதிய மோதலையும் சாதி வெறியையும் தூண்டுவதாக பேசுவது அரவேக்காட்டுத்தமான பேச்சு. நீங்க மாறுற வரைக்கும் இங்க எதுவும் மாறாது என்று பரியேறும் பெருமாள் படத்தினால் எல்லாரும் திருச்திட்டாங்களா” என்ற கேள்வியை கமல் ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.
மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாபநாசம் படம் பற்றி பேசிய மாரி செல்வராஜ் “அந்த படத்தில் அப்பா அந்த பெண்ணை பாதுகாக்க மட்டுமே செய்வார். தப்பு பண்ணது அவன் நீ ஏன் பயப்படனும் என்று ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள கமல் ரசிகர்கள், “அந்த படம் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் ரீமேக் என்பது கூட மாரி செல்வராஜூக்கு தெரியவில்லையா? ரீமேக் படத்தில் கதையை எப்படி மாற்ற முடியும் என்று ஆரம்பத்தில் இருந்தே கமல் மீதான மாரி செல்வராஜூன் வெறுப்பு” என விமர்சித்து வருகின்றனர்.