Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

கமல்.. அந்த சம்பவம்!: ஆச்சரியப்பட்ட பாரதிராஜா

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாரதிராஜா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்த சிகப்பு ரோஜாக்கள் பெரும் வெற்றி பெற்றது.

இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய பாரதிராஜா, “கமலுக்கு முன்பாக இரு முன்னணி நடிகர்களிடம் இந்த கதையை சொன்னேன். எதிர்மறையான கதாபாத்திரம் நடிக்க மறுத்துவிட்டார்கள்.  அதன் பிறகு தான் கமல் இந்த படத்தில் நடித்தாராம்.

அந்தப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் நிகழ்த்திய ஒரு அதிசயத்தை பார்த்தேன். கமலின் கண்களை குளோசப்பில் வைத்து, ‘நான் எப்பொழுது அழு என்று சொல்கிறேனோ அந்த வினாடியில் உன் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் துளி வர வேண்டும்’ என்றேன்.

அதே போல, ‘லெட்ஸ் டியர்ஸ்..’ என்று நான் சொன்னவுடனே அவர் கண்ணில் இருந்து ஒரு துளி நீர் வந்து விழுந்தது.  கமல் அப்படியோர் அற்புத நடிகன்” என்று புகழ்ந்தார் பாரதிராஜா.

 

- Advertisement -

Read more

Local News