உலக நாயகன் கமல்ஹாசன் ’புரொஜக்ட் கே’ என்ற திரைப்படத்தில் வில்லன் ஆக நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பிரபாஸ், தீபிகா படுகோனே. அமிதாப்பச்சன் உள்பட பலர் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க உள்ளார் என்பதும் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படங்களில் ஒன்று இந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. அதில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் கேரக்டர்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும், புரொஜக்ட் கே’ என்ற என்ன? என்ற விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இது குறித்த விழா நடைபெற இருப்பதை அடுத்து இதில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்று உள்ளார். அமெரிக்காவில் உள்ள சாலையில் அவர் நடந்து செல்லும் புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.