தனது மனைவி வாணியை விவாகரத்து செய்த நடிகர் கமல், பிறகு சரிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
அடுத்து நடிகை கௌதமியை திருமணம் செய்யாமலேயே தன்னுடன் நடிகை சில காலம் கமல் தங்க வைத்து இருந்தார். இருவரும் சேர்ந்து பாபநாசம் படத்தில் கூட நடித்து இருந்தார்கள். அதற்குப்பின் கௌதமி கமலை விட்டு பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் கௌதமி, “ நான் கமலுடன் இருந்த இறுதி நாட்களில் சுயமரியாதை இழந்து வாழ்ந்தேன். அவர் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் உள்ளிட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்தேன். ஆனால் சம்பளம் கொடுக்கவில்லை.
தவிர அதன் பிறகு கமலின் நடவடிக்கை மாறியது. இதனால் தான் கமலை விட்டு பிரிந்தேன்” என்று கௌதமி கூறியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.