பிரபல நகைச்சுவை நடிகையான கோவை சரளா, 1995-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து இருப்பார்.
இந்த அனுபவம் குறித்து சமீபத்தில் அவர் பகிர்ந்துகொண்டார்.
“இந்த படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் கமல்ஹாசன் ஜோடி என்றதும் எனக்கு நம்பிக்கை இல்லை. யாரோ விளையாடுகிறார்கள் என்று நான் பிஸினு சொல்லிட்டு வச்சிட்டேன்.
ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் அதேபோல் கால் வந்தது. அப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு கட்டத்தில் கமல்ஹாசனே எனக்கு போன் செய்து படம் பற்றி கூறினார். அப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லாமல் அவரிடம் கேட்டேன். இது உண்மைதான் என்று கூறினார். ஆனாலும் நான் அப்போது பிஸியாக இருந்ததால் அவரிடம் நடிக்க முடியாது என்று சொன்னேன்.
ஆனாலும் கமல்ஹாசன் நீங்கள் நடித்தால் தான் சரியாக இருக்கும் நீங்க எப்பொ ஃப்ரீ என்று கேட்டார். 4 மாதங்கள் ஆகும் என்று சொன்னேன். அதன்பிறகு 4 நாட்கள் கமல்ஹாசன் எனக்காக காத்திருந்து படப்பிடிப்பை தொடங்கினார். அந்த படத்தில் கமல்ஹாசன் கோவை தமிழ் பேசி நடிக்க அவருக்கு நான்தான் பயிற்சி கொடுத்தேன்” என்று கோவை சரளா தெரிவித்துள்ளார்.