Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

 “இனி.. தீவிர அரசியல்”: சூசகமாக சொன்ன கமல்!  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றார். இந்தப் படம் வெளியாகி 63 வருடங்கள் முடிந்து 64 வது வருடம் தொடங்குகிறது.

6 மொழிகளில் 232 படங்களுக்கு மேல் நடித்துள்ள  கமலுக்கு  திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு கமல், “64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.…” என்று தெரிவித்துள்ளார்.

“எஞ்சி உள்ள நாட்கள், என் மக்களுக்காக!” என்று அவர் கூறியிருப்பது, அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ளதை குறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News