பொதுவாகவே நடிகர்களுக்கு பட்டப்பெயர் வைப்பது பழக்கமாகிவிட்டது. மக்கள் திலகம், நடிகர் திலகம் என்பதில் இருந்து இன்று புதிதாய் நடிக்க வருவபர்களுக்குக்கூட முதல் படத்திலேயே பட்டம் அளிப்பது சகஜம்.
இந்த நிலையில்தான் சூப்பர் ஸ்டார் யார் என்கிற விவாதம் ரஜினி – விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்டது.
இதற்கிடையே சிலர், ‘உலகநாயகன்’ என்ற டைட்டிலை வைத்து கமல்ஹாசனையும் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து பட்டம் குறித்து ஏற்கெனவே கமல் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
அதில், ” உலக நாயகன் என்பது ரசிகர்கள் வச்ச பேரு. நல்லா இருக்கிற மாதிரி இருந்தது. அப்புறம் பொருந்தாது என புரிந்தது. எனக்கான பெயர், நடிகன் – கலைஞன்.
உலக நாயகன் என்கிற பட்டமெல்லாம் வேண்டாம். இதெல்லாம், நூல் கட்டாமலேயே பறக்கும் பட்டங்கள்தான்.
விபூதி வைக்க வரும் தாய்மார்களிடம் பகுத்தறிவு பேச மாட்டேன். ஏன்னா அவங்க அன்பா வைக்க வராங்க, அதேபோல் தான் இந்த உலக நாயகன் பட்டமும். ரசிகர்களுக்கு சந்தோஷம். மற்றபடி பட்டங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்” என பேசியுள்ளார்.
இது தற்போதைய சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான பஞ்சாயத்துக்கு பதிலாக இருக்கிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.