Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

புது பிஸினஸ் தொடங்கிய காஜல் அகர்வால்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் பழனி படத்தில் அறிமுகமான  காஜல் அகர்வால்  ஜில்லா, மாரி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் சினிமாவை தாண்டி தற்போது சொந்தமாக அழகு சாதனப்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். கண் மை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் கணவர் கவுதம் கிச்சலு கலந்து கொண்டு காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார்

தொழில் அதிபராக மாறிய காஜல் அகர்வாலுக்கு சக நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News