Wednesday, September 18, 2024

டிசம்பரில் வெளியாகும் ’ஜிகிரி தோஸ்த்’.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

பிரபல நடிகர் ரியாஸ் கான் மகன் ஷாரிக் ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜிகிரி தோஸ்த்’.நண்பர்களை மையப்படுத்தி எடுத்துள்ள  இந்தப்படத்தில் அம்மு அபிராமி, விஜே ஆஷிக், பவித்ரா லஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரண்.வி இயக்கி நடித்திருக்கிறார். மேலும் பிரதீப் ஜோஸோடு இணைந்து தயாரித்தும் உள்ளார். இவர் ஷங்கரின் 2.0 படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். அஷ்வின் விநாயகமூர்த்தி என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

இந்தப்படத்தில் மூன்று நண்பர்கள் சேர்ந்து அவுட்டிங் செல்கின்றனர். வழியில், ஒரு பெண் கொடூர கேங்ஸ்டர்களால் கடத்தப்படுகிறாள். அதைப் பார்த்த நண்பர்கள் குழு அவரை மீண்ட போராடுகிறது. கடைசியில் அந்த பெண்ணை கேங்ஸ்டரிடம் இருந்து காப்பாற்றினார்களா?இல்லையா  என்பதே படத்தின் கதை.

‘டெரரிஸ்ட் டிராக்கர்’ எனும் புதிய தொழில்நுட்பத்தை இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

 

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News