Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ரத்தம் தெறிக்கும் சைக்கோ த்ரில்லர்: ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவியும் நயன்தாராவும்  ‘இறைவன்’  மீண்டும் இணைந்துள்ளனர்.  அஹமத் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

படம்  செப்.28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பெண்களை தேடிக் கொல்லும் சைக்கோ கொலையாளி பிரம்மா. போலீஸ் பிடியிலிருது தப்பித்து,  மேலும் பல கொலைகளை தொடர்ந்து செய்வதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. குற்றவாளிகளை தப்பிக்க விட்டு அவர்களுக்கு தண்டனை தரும் முரட்டு போலீஸ் அதிகாரியான ஜெயம் ரவிக்கு அந்த சைக்கோ வில்லனை பிடிக்கும் பணி தரப்படுகிறது. ‘ராட்சஷன்’, ‘போர்த் தொழில்’ வரிசையில் ரத்தம் தெறிக்கும் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மேக்கிங் ட்ரெய்லரிலேயே மிரட்டுகிறது.

ஹரி கே.வேதாந்த்தின் டார்க் ஒளிப்பதிவும், யுவனின் இசையும் இதயத் துடிப்பை எகிறச் செய்கின்றன. ட்ரெய்லரில் இருக்கும் விறுவிறுப்பு அப்படியே குறையாமல் முழு படத்திலும் இருந்தால் வெற்றி உறுதி. ‘இறைவன்’ ட்ரெய்லர் வீடியோ:

https://www.youtube.com/watch?v=lLUS8vP_x2Q

- Advertisement -

Read more

Local News