Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஒன்றரை பக்கம் வசனம் பேசிக் கொண்டு, ஒரே டேக்கில் ஒரு காட்சியை முடித்த ஜான்வி கபூர்… ஜூனியர் என்டிஆர் நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜூனியர் என்டிஆர் நடிப்பில், சிவா கொரட்டாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “தேவரா” திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 27ம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் கதாநாயகியாக, நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக நடித்து அறிமுகமாகிறார்.

இது ஜான்வி கபூரின் தெலுங்கில் முதல் படம் என்றாலும், தனது அம்மா ஸ்ரீதேவியின் தடம் விட்ட துறையில் முதன்முதலாக இருப்பதால், தனது முதல் படத்திலேயே குறிப்பிடத்தக்க அளவில் வலுவான தோற்றத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக, கொஞ்சம் தெலுங்கு கற்று கொண்டு, படத்தில் வசனங்களை பேசிக் கொண்டு நடித்துள்ளார் ஜான்வி கபூர்.

சமீபத்தில் “காபி வித் கரண்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூரின் நடிப்பை பற்றிக் கூறியபோது, அவர் தெலுங்கில் ஒன்றரை பக்கம் வசனம் பேசிக் கொண்டு, ஒரே டேக்கில் ஒரு காட்சியை முடித்ததாகக் குறிப்பிட்டார். இயக்குநர் கொரட்டாலா சிவா அதை பார்த்ததும், “சரிதானா?” என்று கூறுவதற்குள், தான் கைதட்டி “சூப்பர்” என்று புகழ்ந்ததாகவும், இயக்குநரும் ஆச்சரியப்பட்டதாக கூறினார். மேலும், பல காட்சிகளில் ஜான்வி கபூரின் நடிப்பில், அவரது அம்மா ஸ்ரீதேவியின் சாயல் தென்பட்டதாகவும் ஜூனியர் என்டிஆர் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News