ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. அதே நேரம், படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்தியாவில் சென்சாரில் தப்பித்த இந்த காட்சிகள், சில வெளிநாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஒருசில நாடுகளில் இடைவேளை காட்சிகள் ரீ-எடிட் செய்து வெளியிடப்பட்டு உள்ளது.அதே நேரம், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஜெயிலர் பட காட்சிகளே ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகம் வன்முறை காட்சிகள் இருப்பதாக இந்த முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. காட்சி ஆரம்பிக்கும் கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் நார்வே, பெல்ஜியம் போன்ற நாடுகளிலும் ஜெயிலர் பட காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.