Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

விஜய் பட  சாதனையை முறியடித்த ஜெயிலர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.  சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில்  அவர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் வார்த்தைப் போர்  வெடித்து கொண்டிருக்கிறது.

அதற்கேற்ப ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் , விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார். மேலும், அவர சொன்ன கழுகு காகா கதையும் விஜய்யை குறிப்பிட்டு சொன்னதாக விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது ஆத்திரமடைந்தார்கள்.  இந்த நிலையில் ஜெயிலர் படம் தமிழகத்தில் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறுகின்றனர். அதேபோல் இந்திய அளவில் 50 முதல் 55 கோடி வரையும், உலக அளவில் 90 கோடி ரூபாயும் ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் துணிவு, வாரிசு ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை ஜெயிலர் முடிவெடுத்துள்ளது. அதில் துணிவு திரைப்படம் 21 கோடியே 97 லட்ச ரூபாய் முதல் நாள் வசூல் நிகழ்த்தி இருந்தது.

இதனால், ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News