Friday, April 12, 2024

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஜெ.பேபி’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் பா.இரஞ்சித்தின்  ‘நீலம் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ஜெ.பேபி’.

இந்தப் படத்தை நீலம் புரொடக்சன்ஸ், லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.

பா.இரஞ்சித் தயாரிப்பில்  பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’ படங்களை அடுத்து, ஐந்தாவது வெளியீடாக இப்படம் வெளிவர உள்ளது.

இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில்  ஊர்வசி, தினேஷ், மாறன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சுரேஷ் மாரி  இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரிடமும் பணியாற்றியவர்.

இப்படம் நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக உருவாகியிருக்கிறது.

இந்த ‘ஜெ. பேபி ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்றைக்கு வெளியானது.

விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News