Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“அது ஒரு பிராங்க்” – வைரல் வீடியோ குறித்து விஷால் விளக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அமெரிக்காவில் நடிகர் விஷால் இளம் பெண் ஒருவருடன் நடந்து சென்றார். அவரை வீடியோ எடுப்பதைக் கண்டதும் ஹூடி உடையால் தலையை மூடியபடி வேகமாக ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. இது குறித்து நடிகர் விஷால் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மன்னிக்கவும் நண்பர்களே, சமீபத்திய வீடியோவைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. ஆம் நான் நியூயார்க்கில் இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், எனது உறவினர்களுடன் மன அமைதிக்காக இங்கு வருவது வழக்கம். இதனை ஒரு சடங்காகவே பின்பற்றி வருகிறேன்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று என்னுடைய உறவினர்களால் பிராங்க் செய்ய முடிவு செய்து, அவர்களால் உருவாக்கப்பட்ட வீடியோ தான் அது. என்னுள் எப்போதும் இருக்கும் குழந்தைத்தன்மையை வெளிக்கொண்டு வருவது நல்ல உணர்வை ஏற்படுத்தும். அதனால்தான் அப்படி செய்தேன். அத்துடன் உங்களின் அனைத்துஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறேன். சிலர் இதை காரணமாகவைத்து என்னை டார்கெட் செய்ய முயன்றனர். ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. லவ் யூ ஆல்!” என பதிவிட்டுள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News